Monday, 1 October 2018

“உலக மனநல நாள்” - “மாறிவரும் உலகில் இளைஞர்களும் மனநல ஆரோக்கியமும்”

“உலக மனநல நாள்”

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்விவிழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றதுஇந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.
இவ்வருட கரும்பொருள்
“மாறிவரும் உலகில் இளைஞர்களும் மனநல ஆரோக்கியமும்”
நாளைய உலகம் இளைஞர்கள்  கையில்!
நாளைய தலைவர்கள் இளைஞர்கள் தான்!
எதிர்கால நட்சத்திரங்கள் இளைஞர்கள்!
                           பல வருடங்களாக இன்றிய இளைஞர்களை நாம் போற்றுகிறோம், ஒரு நாட்டின் எதிர்காலம் மற்றும் அல்ல அவர்களை சார்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரின் எதிர்காலமும் இன்றிய இளைஞர்களிடம் உள்ளது, இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 41 சதவிகிதம் நபர்கள் 20 வயதிற்குக் கீழ் உள்ளனர்.  இவர்கள்  செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு எதிர்காலத்தில் அதிகமாக உள்ளது,  ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அத்திவாரம் இளைஞர்களின் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம். இதற்க்கு தனிநபர் ஆளுமைத்திறன் மேம்பாடு என்ற அம்சத்தில் மிக முக்கியமானதாகும். இந்த ஆளுமைத் திறன் என்பது சரியான வழிகாட்டுதல், அணுகும் நிலை மற்றும் செயல்நெறிகள் ஆகியவற்றைச் சார்ந்து உருவாவது ஆகும். இளைஞர்களின் எல்லை என்பது அதி வேகமாக வளர்ந்து வரும் நகர நெருக்கடிகளின் தீய விளைவுகளுக்கு இன்றைய இளைஞர் சமுதாயமானது வருத்தப்படத்தக்க அளவில் ஆட்படுகின்றனர். மேலும் வாழ்க்கையை நடத்துவதற்காகவே குற்றச் செயல்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த எதிர்மறையான அணுகுமுறைக்கு ஒரு மிகப்பெரும் காரணமாக கிடைப்பதற்கும் அணுகுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட முடியும். இளைஞர்கள் நெருக்கடி மற்றும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணம்
இளைஞர்கள் உளநலம்:

                பள்ளிப்பருவத்திலும் பதின்ம வயதுகளிலும் பல்வேறுவிதமான உளநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை மருத்துவர்களாலும், அவர்களோடு அதிகம் பழகும் ஆசிரியர்களாலும் அவதானிக்க முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
1. முக்கிய காரணம் குடும்ப அன்னியோன்யம் குறைந்து வருவதாகும். பெற்றோர்;கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூட்டுக் குடும்பமுறை சிதைவுறுவதால் உதவிக்கு பாட்டன் பாட்டி இல்லாமல் போவதால் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவதானிப்பும் நேச உணர்வும்; குறைந்து போகிறது.
2. ஆனால் அதே நேரம் கல்வி ரீதியாக பிள்ளைகளிடமிருந்து உயர் பெறுபேறுகள் பெற்றோரால் எதிர்பார்க்கப்படுகிறதுஇவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாத பிள்ளைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர் பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, முரட்டுத்தன்மை, தவாறான பழக்கங்கள் போன்ற நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். தவறான உணவு முறைகளைப் பழகிக் கொள்கிறார்கள்.
அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பலரும் ஆளாகிறார்கள். தவறான பாலியல் பழக்கங்களுக்கும் ஆளாகி நோய்களைத் தேடும் அபாயமும் ஏற்படுகிறது. போதைப் பொருள் பாவனையும் இதன் நீட்சியே ஆகும். எனவே பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் சமூக நிலைகளில் இளம் வயதினர் உளவியல் பாதிப்புக்கு ஆளாகுமிடத்து அதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து நெறிப்படுத்துவது அவசியம். இதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றோர் ஆசிரியர்களிடத்து வளர்ப்பது அவசியமாகிறது.
சமுதாய அக்கறை:

           இன்றைய இளைஞர்களிடம் சமுதாய அக்கறை அதிகம் உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., களில் சேர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறான். இதன் மூலம் அவன் மனதில் சமூக அக்கறை ஏற்படுகிறது. கல்லுாரி காலத்தில் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம், ஆறு, கண்மாய் போன்றவைகளில் துார் வாரும் பணிகளில் ஈடுபட்டு சமுதாய அக்கறையில் பங்கு பெறுகிறான்
தாழ்வு மனப்பான்மை:

                    தாழ்வு மனப்பான்மை இளைஞர்களை சமுதாய அக்கறையில் ஈடுபட முடியாமல் செய்கிறது. படிக்கிற காலத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் திட்டும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குடும்ப பொருளாதார நிலைமையால், அவர்களது தோற்றம், நடை, உடை போன்ற பல விஷயங்களில் ஒவ்வொரு இளைஞனும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்கி போகிறான். தாழ்வு மனப்பான்மை போன்ற காரணிகளை தவிர்த்து, இளைஞர் சமுதாயத்தை சமூக அக்கறை கொண்டவனாக மாற்ற வேண்டும்.
போதைப் பொருள்:

                         மேற் கூறிய பல்வேறு காரணங்களால் இளம் பராயத்தினர் பலரும் மது, புகைத்தல் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையில் இறங்கி போலிச்சுகம் காண முயல்கிறார்கள். 'ஒருக்கால் பாவித்துப் பார்ப்பம்' என இவற்றில் விளையாட்டாக இறங்கிவிட்டால் கூட மீள்வது கடினமாகும். 'சும்மா குடிச்சுப் பாரடா' என நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகப் பரீட்சிக்கும் உங்கள் செயல் மீளாக் குளியில்தள்ளிவிடும் என்பதை மறக்கக் கூடாது. மற்றவர்கள் முகத்திற்காக அவர்களது வேண்டுதலுக்காக இவற்றில் இறங்க வேண்டாம். 'மாட்டேன், வேண்டாம்' என முகத்திற்கு நேரே மறுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்வது இளம் பராயத்தில் அவசியம். இதற்கான பயிற்சி பெற்றொர்களிடமிருந்துதான் வரவேண்டும். மது, போதைப் பொருட்கள், சிகரட் போன்றவை எங்கும் கேள்வியின்றி விற்பனையாவது ஆபத்தானதாகும். முக்கியமாக இளம் வயதினருக்கு அவ்வாறு கிட்டவிடக் கூடாது. சட்டங்களால் மட்டும் இவற்றை அமுல் படுத்த முடியாது. சமூகத்தில் இவற்றிக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ரேடியோ, ரீவீ, இணையம் போன்றவை ஊடாக வழிகாட்டலாம்.
வளர்இளம் பருவமும் மனச்சிதைவும்:

                          மனச்சிதைவு நோயில் எட்டு வகைகள் உள்ளன. இவற்றில் மூன்று வகையான மனச்சிதைவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் வளர்இளம் பருவத்தின் பின்பகுதியான 17 வயதுக்கு மேல் வெளிப்பட ஆரம்பிக்கும். சில வேளைகளில் படிப்பில் நாட்டமின்மை, பள்ளியைப் புறக்கணித்தல், எளிதில் ஆக்ரோஷம் அடையும் தன்மை உட்படச் சில நடவடிக்கை மாற்றங்கள் 15 வயதுக்குப் பின்னர்க் காணப்படலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வளர் இளம்பருவத்தில் ஆரம்பிக்கும் ஹெபிஃபிரேனியா (Hebephrenia) என்ற ஒருவகை மனச்சிதைவு நோயானது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தானாக ரோட்டில் சுற்றித் திரியும் அளவுக்குக் கொண்டுபோய் விடுவதால் ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்வது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்.

அறிகுறிகள்
               பின்வரும் அறிகுறிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் மனச்சிதைவு நோயாக இருக்கலாம். இதில் பெரும்பாலான அறிகுறிகள் வலிப்பு நோய், மூளைக் காயம், பக்கவாதம், ஞாபக மறதி நோய், மன அழுத்த நோய் போன்ற வேறு மனநோய்களிலும் காணப்பட வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, இதை உறுதி செய்ய முடியும்.
  Ø தனது உயிருக்கு ஏதோ ஒருவிதத்தில் ஆபத்து இருக்கிறது என்ற தேவையற்ற பயம்
  Ø  தன்னைப் பற்றிதான் பிறர் பேசுகிறார்கள், கேலி செய்கிறார்கள் என்ற தேவையற்ற சந்தேக எண்ணம்
  Ø  பிறர் தன்னை மாயசக்தி மூலமோ, எலக்ட்ரானிக் கருவிகள் மூலமாகவோ கட்டுப்படுத்துவதாகத் தோன்றுவது
  Ø ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாயக்குரல்கள் காதில் பேசுவது போன்ற கேட்பது
  Ø  பிறர் கண்களுக்குத் தெரியாத உருவங்கள் தங்களுக்குத் தெரிவதாகச் சொல்வது
  Ø  தானாகப் பேசிக்கொள்வது மற்றும் சிரித்துக்கொள்வது மற்றும் சம்பந்தமில்லாத பேச்சுகள்
  Ø  சந்தேக எண்ணங்களால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது
  Ø  எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது, சுத்தம் பேணுவதில்கூட மந்தமாக இருப்பது
  Ø  தூக்கமின்மை, சாப்பிடுவதில் வித்தியாசம்
  Ø  ஒரே இடத்தில், ஒரே நிலையில் மணிக்கணக்கில் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது
  Ø  தற்கொலை எண்ணங்கள், யாரோ தன்னைச் சாகத் தூண்டுவதாகச் சொல்வது
  Ø  தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத தன்மை, எதிலும் நாட்டம் இல்லாமல் சோம்பலாக இருப்பது

உடலுக்கும் மனதுக்கும் சமமான முக்கியத்துவம் அவசியம்:
மருத்துவத் துறையில் மனநல மருத்துவத்தைப்போல வேறு எந்தப் பிரிவும் கடும் எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்தித்ததில்லை. அதேநேரம் மனநோய்களைப் பற்றி மக்களிடம் நிலவும் கண்ணோட்டமும் பல மாற்றங்களை அடைந்து வருகின்றன. குறிப்பாக மனச்சிதைவு நோய், ‘எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்என்பது மாதிரிப் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. சிகிச்சையைப் பொறுத்தவரையில் உடல் நோய்களுக்கும் மனநோய்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
நீரழிவு நோய், இதயப் பிரச்சினை இருந்தால் காலம் முழுக்கவும், ஆஸ்துமா இருந்தால் குளிர்காலம் போன்ற குறிப்பிட்ட மாதங்களிலும், காய்ச்சல், வாந்தி இருந்தால் சில நாட்களுக்கு மட்டும் மாத்திரை சாப்பிடுகிறோம். இதைப்போலத்தான் சில மனநோய்களுக்குப் பல வருடங்களுக்கும், சில மனநோய்களுக்குக் குறிப்பிட்ட கால அளவு மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது. சில நோய்களுக்குக் கவுன்சலிங் என்ற ஆலோசனை மட்டும் போதுமானதாக இருக்கும். மனச்சிதைவு நோயும் அதன் பல வகைகளுக்கும் இந்த மூன்று சிகிச்சை கால அளவுகளுக்கும் பொருந்தக்கூடியவைதான்.
பெற்றோர் செய்யவேண்டியவை:
  Ø  மனச்சிதைவின் அறிகுறிகள் தெரிந்த உடன் சிகிச்சை அளிப்பது, நோய் முற்றி விடாமல் தடுக்கும். பெரும்பாலும் முற்றிய நிலையே மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதற்கு முக்கிய காரணம்.
  Ø  இந்தப் பின்னணியில் பேய்க் கோளாறு என்று சொல்லிக் கட்டிப்போடுவதோ, அடிப்பதோ ஆக்ரோஷத் தன்மையை அதிகரிக்கும்.
  Ø  இவர்கள் எளிதில் போதைப் பழக்கத்துக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால், தீவிரக் கண்காணிப்பு தேவை
  Ø  நோய் அறிகுறிகள் மறைந்துவிட்டால், உடனே மாத்திரையை நிறுத்திவிடக் கூடாது. மருத்துவர் குறிப்பிடும் காலம்வரை மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  Ø  பக்க விளைவுகள் இருந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். தற்போது பக்கவிளைவுகள் குறைந்த அல்லது இல்லாத மாத்திரை வகைகள் கிடைக்கின்றன.
  Ø நோயாளி மாத்திரை சாப்பிட ஒத்துழைக்காத பட்சத்தில் மாதம் ஒருமுறை போடக்கூடிய ஊசி மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.
  Ø  சில நேரம் ஆரம்ப அறிகுறிகள் அதிகமாக இருந்தால் மின்அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) நல்ல பலனைத் தரும். இது மாத்திரைகளைவிட பாதுகாப்பானதும்கூட
  Ø  நோய் அறிகுறிகள் குறைந்த உடன் அப்படியே விட்டுவிடாமல் உடற்பயிற்சி, வேலைத்திறன் பயிற்சிகளை ஆரம்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் சோம்பல் தன்மை ஏற்பட்டு எந்தவித உத்வேகமும் இல்லாத நிலைக்குப் போய்விட வாய்ப்பு உண்டு.
 மனநல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காக ஆண்டுதோறும் (அக்.10ஆம் தேதி) இன்று உலக மனநல தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும், அந்நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த நோய் நமக்கு வந்திருக்கிறது. அதை மருத்துவத்தின் மூலம் போக்கிக் கொள்ளலாம் என்று நோயாளிகள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்த மனநோய் என்பது தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைக்கூட உணர்ந்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் கொடுமையான ஒரு நோயாகும்.
உலக சுகாதார நிறுவனம். ஆனால் உடல்நலக் குறைபாடுகளுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக ஏற்கும் மக்கள், மனநலக் குறைபாடுகளை 'விதி' என நம்புகிறார்கள். இந்த மூடநம்பிக்கைகள் கிராமப்புறங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மனநலக் குறைபாடுள்ளவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக சாமியார்களையும், மந்திர வாதிகளையும், ஜோதிடர்களையும் நாடும் வழக்கம்தான் நீடித்து வருகிறது என்பது வேதனைக்குரிய செய்தி. அத்துடன் மனநலக் குறைபாடுகளுக்கு வெளிப்படையாக மருத்துவர்களை அணுகுவது இன்னும் சங்கடமாகவே உணரப்படுகிறது. இந்தியா முழுவதும் மனநல குறைபாடு களுக்கென்றே சிகிச்சை தர பிரத்யேகமாக 43 அரசு மனநல மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அத்துடன் 400 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநலச் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கே 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சைகள் எடுத்துக் கொள்கின்றனர்.
 பொதுவாக் மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு, உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். என புள்ளிவிவரம் கூறுகிறது. எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்.
ஒரு வயது குழந்தைக்கு கூட மனஅழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பின்னாளில் மனநலம் பாதிக்கப்படலாம். இன்று உலக மனநல தினம். இளமையிலும்,முதுமையிலும் மனநலம் பேணுவதின் அவசியத்தை விளக்குகின்றனர், இந்தாண்டு உலகமனநல நாள் மாறிவரும் உலகில் இளைஞர்களும் மனநல ஆரோக்கியமும்ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment