Friday, 26 October 2018

இளைனர்களிடம் உள்ள ஆபத்தான ஆனந்தம்.


                                             இளைனர்களிடம் உள்ள ஆபத்தான ஆனந்தம்.


                                         ஒன்று  பைக் ரேஸ்              மற்றொன்று          போதை பொருட்கள்

பைக் ரேஸ்:

                                வீதிகளில் காற்றாடி விடுவதும், சாலைகளில் மோட்டார் பைக் ரேஸ் செல்வதும் சென்னையின் கறுப்பு விளையாட்டுகளாக ஆகி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இதில் சிக்கி உயிரிழந்த சிறுமி சைலஜா உள்பட பைக் ரேஸ் பறித்த அப்பாவிகளின் உயிர்கள் ஏராளம். கடந்த இரு தினங்களுக்கு முன்புகூட மெரினாவில் பைக் ரேஸ் ஓட்டிய ஆறு மாணவர்களை கைது செய்தது போலீஸ்பைக் ரேஸ் ஓட்டுவது பெரும்பாலும் 15 தொடங்கி 22 வயதுவரையுள்ள சுள்ளான்களே. சென்னையின் கிழக்கே பெசன்ட் நகர், அடையார் பகுதியில் பெரும் பணக்காரர்கள் கொண்ட ஒரு குழுவும், வடக்கே ராயபுரம், காசிமேடு என்று இன்னொரு குழுவும் என மிகப் பெரும் குழுவியக்கம் இதில் உண்டு, இன்றைய சென்னை நிலவரப்படி மொத்தம் எட்டு வகை பைக் ரேஸ்கள் நடத்தப்படுகின்றன.

தேவை கடுமையான சட்டங்கள்!

                            தற்போது போலீஸார் கடுமையான கெடுபிடிகளைக் காட்டினாலும் ரேஸ் பைக் ஓட்டுபவர்களை முழுமையாகத் தடை செய்ய முடியவில்லை. சிக்குபவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 279, 304 (), 308 ஆகிய பிரிவுகளில் மட்டுமே கைது செய்ய சட்டம் அனுமதிக்கிறது.
இதற்கும் அதிகமான தண்டனை கிடைக்கக்கூடிய பிரிவுகளில் இவர்களைக் கைது செய்வதற்கான ஆலோசனைகளை போலீஸார் மேற்கொள்வது அவசியம்.

போதை பொருட்கள்:


                     மொத்த சமூகத்தின் பெரும்பகுதி குடிநோயாளிகளாகவும் மனநோயாளிகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் கொடூரமான காலத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பத்து பேர் போதைப் பழக்கத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிவரம். போதை என்பது ஆல்கஹால் மட்டும் இல்லை. புகையிலை முதல் கஞ்சா, ஹெராயின் வரை உள்ள அனைத்துமே போதைப் பொருட்கள்தாம்தவிர சில இருமல் மருந்துகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தின்னர் போன்றவற்றையும் போதைப் பொருளாக சிலர் பயன்படுத்துகின்றனர். கிராமங்களைவிட நகரங்களிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, இளைஞர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது என்பதுதான் வேதனை. இந்தியாவில் உள்ள 75 சதவிகிதக் குடும்பங்களில் யாராவது ஒருவரேனும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவராக இருக்கிறார் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

போதை பொருட்களின் வகைகள்:

                                             போதைகள் பலவிதம் போதைப் பழக்கம் என்று பொதுவாக நாம் சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. சிலவகை போதைப் பொருட்களை விற்பனை செய்ய அரசே அனுமதி அளித்துள்ளது. உதாரணமாக சிகரெட், மதுபானங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். இதைத் தவிர மருத்துவக் காரணங்களுக்காக மெத்தடோன் (Methadone), ஆக்ஸிகோடோன் (Oxycodone), சோல்பிடெம் (Zolpidem) போன்ற மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை சிலர் போதைப் பொருளாக சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துகின்றனர். கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி உட்பட பலவகையான போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றனஇந்த சட்டவிரோத போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சட்டப் படியான போதைப் பொருட்களின் சந்தை மதிப்பைவிடவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள். போதைப் பொருட்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள். டிப்ரசன்ட் (Depressant): ஆல்கஹால் நிறைந்த பானங்களும் சால்வென்ட்ஸ் எனப்படும் சில திரவங்களுமே டிப்ரசன்ட். மூளை செல்களைக் கட்டுப்படுத்தி அதன் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால் இதற்கு இந்தப் பெயர்ஹல்லூசினேஷன்கள்: இல்லாததை இருப்பது போல் காட்டுவது ஹல்லூசினேஷன். நாம் காணும் காட்சிகள், கேட்கும் ஒலிகள் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ள போதைப் பொருட்கள் இவை.  கானபிஸ் (Cannabis), எல்எஸ்டி (LSD) போன்றவை இந்த வகையில் அடங்கும். வலி நிவாரணிகள்: நரம்பு மண்டலத்தை மட்டுப்படுத்தி வலி உணர்வுகளை உணரச் செய்வதைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இவை. மருத்துவக் காரணங்களுக்காக இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்பிரின் போன்ற மருந்துகளும் ஹெராயின் போன்ற லாகிரி வஸ்துகளும் இந்தப் பிரிவில்தான் வருகின்றன. செயலூக்கிகள் (Performance enhancer): தசைகளின் ஊக்கத்து க்கு உதவும் மருந்துகள் இந்தவகையைச் சேர்ந்தவை. குறிப்பாக, அனபாலிக் ஸ்டீராய்டு மருந்துகள். இவையும் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவக் காரணங்களுக்கு வெளியே போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். தூண்டிகள் (Stimulants): மூளையில் உள்ள செல்களை தற்காலிகமாகத் தூண்டி செயல்பட வைக்கும் திறனுடையவை. புகையிலை, காபீன் மற்றும் எக்ஸ்டசி போன்ற போதைப் பொருட்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இருக்கும் விவரங்களைப் பார்த்துவிட்டோம்

மனநல மருத்துவர்களின் கருத்து !

                                 பழக்கத்துக்கு அடிமையாவது தான் போதை. அதாவது நமது உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட பொருளில் உள்ள ஒரு வேதித்தன்மை மிகவும் பிடித்துப்போய்விட்டது என்றால் அதற்கு நம் உடல் மிக விரைவாக அடிமையாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குச் செல்கிறது. இப்படி அடிமையாகும் போதைப் பொருள், லாகிரி வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது மருந்தாகக் கூட இருக்கலாம்ஆனால், மருத்துவரின் பரிந்துரையோடு நோயாளியின் உடலின் தேவை அறிந்து மருந்துகளாகத் தரப்படுபவை என்பதால் அவற்றால் ஆபத்து இல்லைபோதைதரும் பொருட்களின் இந்த வகை மருத்துவப் பயன்பாட்டை ‘use’ என்கிறோம். உதாரணமாக இடுப்பு வலி இருக்கிறது என்றால் அதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணியைப் பரிந்துரைக்கும் அளவில் பயன்படுத்தினால் அதுயூஸ்’. அதே மருந்தை மருத்துவர் பரிந்துரையின்றி ஒருவர் வலி நிவாரணத்துக்காகப் பயன்படுத்தினால் அது Misuse. மருத்துவர்கள் பயன்படுத்தும் போதை தரும் மருந்தையோ அல்லது அதில் உள்ள போதை தரும் அம்சத்தை மட்டும் பிரித்தெடுத்து அதை போதைக்காக மட்டுமே பயன்படுத்துவதையோஅப்யூஸ்என்கிறோம்.  ‘ட்ரக் அப்யூஸ்என்பது எல்லாவகை போதைப்பொருளையும் பயன்படுத்துவதுதான். இந்த போதைப் பொருளைத் தொடர்ந்து ஒருவர் பயன்படுத்தும்போது அவர் போதையைச் சார்ந்திருந்தல் (Drug Dependant) என்ற நிலைக்குச் செல்கிறார். இதன் தொடர்ச்சியான அடுத்த நிலைதான் போதைக்கு அடிமையாதல் (Drug addiction).

தமிழகத்தில் போதைப்பொருட்கள்:

                                   தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கூட்டத்தைப் போலவே பல்வேறு வகையான போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகையிலையையும் ஆல்கஹாலையும் போதைப் பழக்கத்தின் நுழைவாயில் என்பார்கள்ஒருவர் இந்தப் பழக்கங்களுக்குள் நுழைந்துவிட்டால் மெல்ல மெல்ல ஹெராயின், கஞ்சா, எல்எஸ்டி என ஒவ்வொரு போதைப் பொருளாகப் பயன்படுத்தும் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் பெற ஆரம்பிப்பார். ஆனால், ஹெராயின் உள்ளிட்ட டிசைனர் ட்ரக்ஸுகளுக்கு இன்றைய இளைய தலைமுறை நேரடியாகவே அடிமையாகி இருக்கிறது என்பதுதான் கொடுமை. இவற்றின் விலை தங்கத்தைவிட அதிகம் என்பதால் வசதியான வீட்டுப்பிள்ளைகளே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் வார இறுதி பார்ட்டிகளில் இந்த டிஸைனர் ட்ரக்ஸ்களை ஆண் பெண் பேதமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் செக்ஸுவல் அப்யூஸ் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றனபோதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச்செயல்களில்கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும்போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். ஒருவர் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு சிகரெட் பிடித்தால் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார். தொடர்ந்து 20 நாட்கள் குடிப்பவர் குடிக்கு அடிமையாவார்ஆனால், ஹெராயின், கஞ்சா போன்ற போதை மற்றும் லாகிரி வஸ்துகளை பத்து நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலே அடிமையாகிவிடுவார்

பாதிப்புகள் மற்றும் சிகிக்சை :


                                   போதைப் பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளை வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ் (Withdrawal symptoms) என்பார்கள்அந்தப் பொருளை உடனே நுகர வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். உடலெங்கும் நடுக்கம் ஏற்படும். பதற்றமும், கோபமும், எரிச்சலும் ஏற்படும். எதிலும் ஆர்வ மின்மை, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற டிசைனர் ட்ரக்ஸ்களுக்கு அடிமையானவர்களுக்கு இந்த வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ்  தீவிரமாக இருக்கும்கடுமையான உடல் வலி, குடலே வெளிவந்து விடுவதைப் போன்ற வாந்தி, தலைவலி போன்றவை உக்கிரத்துடன் வெளிப்படும். இன்று மறுவாழ்வு மையங்கள் நாள்தோறும் பெருகிவருகின்றன. போதை அடிமைகள் அதிகரித்து வருவதன் சாட்சி இது. அரசின் அனுமதி பெற்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சை பெற்றால் மறுவாழ்வுக்குத் திரும்பலாம். போதை அடிமைகளின் மறுவாழ்வுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம். அவர்கள் தினசரி போதைப் பொருளைப் பயன்படுத்தும் நேரம் வந்ததும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் இதைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் அவர்களைக் கவனிக்க வேண்டும். ஓரளவு உடலும் மனமும் தேறி வரும்வரை அவர்களைக் கிண்டல் செய்வது, திட்டுவது, மனம் வெறுக்கும்படி நடந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’ Monday, 22 October 2018

இளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)


                                                இளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)


டீன் வயதினர்:

10 லிருந்து 19 வயது வரை (WHO அளவுகோலின் படி) ஓர் இளைஞரின் உடல் தீவிர மாறுதலை அடைகிறது. பருவ காலத்திற்குள் நுழைவதால் இளைஞர்கள் உடல் மாற்றங்களையும் உணர்வு மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள். இதனால் உடல் வடிவ மாறுதலோடு ஆளுமையும் நடத்தையும் தீவிரமாக மாறுகிறது. இதற்கு ஒரு பாதி காரணம் பாலுணர்வு பற்றிய அறிதலே. இது மாதவிடாயினாலும் பிற உடல் மாற்றத்தாலும் ஏற்படுபவை. இன்னொரு பாதி காரணம் இயக்குநீர்கள் அதிகமாகச் சுரப்பதால் மனநிலையில் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள்:

மனஅழுத்தம்:


·        உச்சகட்டமான மனவருத்தத்தில் இருப்பதே மனவழுத்தம் என வரையறுக்கலாம். இந்நோயாளிகள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இன்றி இருப்பார்கள்.
 • ·        இளைஞர்களுக்கு உண்டாகும் மனஅழுத்த அறிகுறிகள்
 • ·        கல்வி சாதனைகளில் வீழ்ச்சி
 • ·        நட்புறவில் நடத்தைப் பிரச்சினைகள்
 • ·        குடும்பத்தோடும் பிறரோடும் கூடி ஒழுகாமை
 • ·        உற்சாகமும் உத்வேகமும் இழத்தல். சுய ஊக்குவிப்பில் சிரமம்
 • ·        தேவையற்ற முரட்டுத்தனம், கோபம், வெறி
 • ·        வருத்தம் மற்றும் இயலாமை உணர்வுகளை வெளிப்படுத்தல்
 • ·        விமரிசனங்களைத் தாங்கிக்கொள்ளமுடியாமை
 • ·        பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு இணங்க வாழமுடியாமை
 • ·        சுயகௌரவக் குறைவும் குற்ற உணர்வில் வருந்துதலும்
 • ·        இளைஞர்களின் மனநிலை ஊசலாட்டம்

இளைஞர்கள் உடல், உணர்வு மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஊடாகச் செல்ல வேண்டியுள்ளது. நட்பு, படிப்பு, உறவு, முறிவு என அவர்களுக்கு முன் இருப்பவை ஏராளம். ஓர் இளைஞர் மனம்போன போக்கிலும் உற்சாகமற்றும் இருந்தால் கீழ்வருவனவற்றைக் கருத வேண்டும்.

உறக்கத்தின் தன்மை:

இளைஞர்கள் ஓர் இரவில் 8-9 மணி நேரம் உறங்க வேண்டும். குறைந்த நேரம் உறங்கும் இளைஞர்கள் மனவழுத்தம் அடையும் வாய்ப்புகளும் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகும். நல்ல இரவு நேரத் தூக்கம் ஆரோக்கியமான ஓர் இளைஞருக்கு அவசியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனநிலையும் மனவழுத்த சாத்தியக்கூறும்: இளமைக் காலமேவாழ்க்கையின் சிறந்த காலம்எனப் புகழப்படுகிறது. சில இளைஞர்களுக்கு மனவழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் பசியளவு, உறக்க மாற்றம், ஊக்கக்குறைவு, சிடுசிடுப்பு ஆகிய அறிகுறிகளைக் கவனித்து வர வேண்டும். சில இளைஞர்களுக்கு குறைந்த மாற்றங்களே உண்டாகும். இவர்களுக்கு மனவழுத்தம் வர வாய்ப்பில்லை. ஆனால் ஓர் இளைஞரின் நடத்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால் அதைச் சிரத்தையோடு நோக்க வேண்டும். குழந்தைகளோடு பேசுவதும் அவர்களுக்குத் துணைநிற்பதும் மனவழுத்தம் உண்டாவதைத் தவிர்க்கும்.

மதுவினால் இளைஞர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் எவை?
மதுவை பயன்படுத்துவதால் ஏற்படும் குறுகிய கால பக்க விளைவுகளில் அடங்குவன:
 • ·        ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் மந்த செயல்பாடு
 • ·        மன ஒருமை குறைவு
 • ·        குமட்டலும் வாந்தியும்
 • ·        உடல் சிவந்து தோன்றுதல்
 • ·        கண் மயங்கலும் பேச்சு குழறலும்
 • ·        கடுமையான மனநிலை: -ம்: முரட்டுத்தனம், வெறி, மனவழுத்தம்
 • ·        தலைவலி
 • ·        மன இருள்

தொடர்ந்து நீண்டநாள் மதுவைப் பருகிவருவதால் உடல், உணர்வு, சமூகப் பிரச்சினைகள் உண்டாதல். அவற்றில் அடங்குவன:
 • ·     நீண்ட நாள் மது அருந்தி வருவதால் கல்லீரல் இழைநார், புற்றுநோய்கள் [(குறிப்பாக வாய், தொண்டை, குரல் வளை, இரைப்பை, குடல் (ஆண்கள்) மார்பகம் (பெண்கள்)] உண்டாகின்றன.
 • ·     மாரடைப்பு, இரத்த அழுத்தம் உட்பட பல இதய, இரத்தம் தொடர்பான        நோய்கள் ஏற்படுகின்றன.
 • ·        மதுவை சார்ந்திருத்தல்
 • ·        கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் சமயத்திலும் மது எடுப்பதால் குழந்தை பாதிக்கப்படுகிறது.
 • ·        தோல் பிரச்சினைகள்
 • ·        பாலியல் பலவீனம், கருவுறுதல் ஆகிய இனப்பெருக்க செயல்பாடுகளில் பிரச்சினைகள்.
 • ·        மன ஒருமைப்பாடு, ஞாபகப் பிரச்சினைகள்
 • ·        மனவழுத்தம்

போதைப் பழக்கம் எவ்வாறு உருவாகிறது?

போதைமருந்து பழக்கம் படிப்படியாக அதிகரிக்கிறது. உதாரணமாக, வாரக்கடைசியில் நண்பர்களோடு புகைத்தல்வெறியில் பரவசம் அடைதல், எப்போதாவது நடைபெறும் விருந்துகளில் கொக்கைன் எடுத்தல் போன்றவை போதைப் பொருளை வாரத்தில் இருமுறை உட்கொள்ளவும் பின் நாள்தோறும் எடுக்கவும் வழிகோலும். பின்னர் போதை மருந்தைப் பெறுவதும் பயன்படுத்துவதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும்.

போதைப்பொருள் ஒரு தேவையை நிறைவுசெய்ய உதவுமானால் இளைஞர்கள் அதனைச் சார்ந்து இருக்கத் தொடங்கி விடுவர். உதாரணமாக, கலக்கமான அல்லது அழுத்தமான சூழ்நிலைகளில் ஓர் இளைஞர் தம்மை அமைதிப்படுத்த போதைப்பொருளை உட்கொள்ளலாம். அது அவருக்கு ஊக்கம் அளித்து, கூச்சமாக உணரும் சமூக சூழல்களில் அவரைத் தன்னம்பிக்கை உடையவராக மாற்றலாம்.

அதுபோல, ஓர் இளைஞர் தனது வாழ்க்கையின் ஒரு வெறுமையை நிரப்ப போதைபொருளை எடுத்தால் எப்போதாவது பயன்படுத்தும் நிலை மாறி தவறான போதைபொருள் பயன்படுத்தலும் போதைக்கு அடிமையாகும் நிலையுமாய் மாறி எல்லையைக் கடக்கும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான சமநிலையை வாழ்க்கையில் பேணவும், வாழ்க்கையின் நன்மைகளை உணரவும் போதைப் பொருள் பயன்பாட்டை விடுத்து இளைஞர்களுக்கு நேரிய அனுபவங்கள் தேவைப்படுகின்றன.
போதைப் பொருள் பழக்கம் ஒரு இளைஞரைப் பற்றும் போது அவர் தமது வேலை அல்லது கல்வியை அடிக்கடி தவறவிடுகிறார் அல்லது நேரம் கழித்து வருகிறார். இதனால் அவரது செயல்திறன் வெகுவாகக் குறைகிறது. தமது சமூக அல்லது குடும்பக் கடமைகளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறார்.

மதுவையும், போதைப்பொருளையும் பிறவற்றையும் விட இளைஞர்களுக்கு உதவிசெய்யவும்: (Help teen to quit alcohol, drugs or other substances)

 • ·       குழந்தைகளின் நடத்தை மாறுதல் குறித்து ஆரம்பத்திலேயே அவர்களிடம் பேசவும்.
 • ·  விளையாட்டு போன்ற குழு செயல்பாடுகளில் இளைஞர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தவும்.
 • ·        வீட்டு விதிகளை இளஞர்கள் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கவும்.
 • · தொடர்ந்து அவர்களோடு பேசுங்கள். இளஞர்கள் நன்றாகச் செய்யும் சிறிய செயல்களையும் கூட புகழவும்.
 • · உங்கள் குழந்தையின் நண்பர்களைத் தெரிந்து வைத்திருங்கள். புகை, மது, போதைப்பொருள் பழக்கம் இல்லாத நண்பர்களே உங்கள் குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பு.